About: http://data.cimple.eu/claim-review/fc543b1448cb24b393254f599e8750fd611d13ac3ae30d33164d0698     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்ட பெண்ணை சந்தித்தாரா ராகுல் காந்தி? பாரத் ஜோடோ யாத்திரையின்போது பாகிஸ்தான் வாழ்க என்ற கோஷமிட்ட பெண்ணை ராகுல் காந்தி சந்தித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது அமுல்யா லியானா யார்? பிப்ரவரி 2020-யில் பெங்களூரில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றபோது அமுல்யா லியானா எனும் கல்லூரி மாணவி ‘பாகிஸ்தான் வாழ்க’ எனும் கோஷத்தை மேடையில் எழுப்பினார். இதன் காரணமாக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின்போது அமுல்யா லியானாவை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்ததாக கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும்! ஜே.பி.நட்டாவின் தவறான தகவல்களும்!! Fact Check/Verification பாரத் ஜோடோ யாத்திரையின்போது பாகிஸ்தான் வாழ்க என்ற கோஷமிட்ட அமுல்யா லியானாவை ராகுல் காந்தி சந்தித்ததாக தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். வைரலாகும் படத்தில் ராகுல் காந்தியுடன் இருக்கும் பெண்ணின் தோற்றம் அமுல்யா லியோனா தோற்றத்திலிருந்து மாறுபட்டு இருப்பதை நம்மால் உணர முடிந்தது. இதனையடுத்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி நம் தேடலை தொடங்கினோம். இத்தேடலானது மிவா ஜோலி என்பவர் ‘Hope’ (நம்பிக்கை) என்று தலைப்பிட்டு பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவிற்கு நம்மை அழைத்து சென்றது. மிவா ஜோலி பிரியங்கா காந்தி வத்ரா பதிவிட்ட பதிவை பகிர்ந்திருந்தார். அப்பதிவில் வைரலாகும் படம் இடம்பெற்றிருந்தது. மிவா ஜோலி கேரள காங்கிரஸின் மாணவ அணியான கேரள மாணவ யூனியனின் மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார் என்பதை ஃபேஸ்புக் பயோ மூலம் அறிய முடிகின்றது. மிவா ஜோலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் ராகுல் காந்தியுடன் இணைந்து பாத யாத்திரையில் கலந்துக் கொண்ட வீடியோவையும் மிவா அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மேலும் தேடியதில், மிவா ஜோலி அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் படம் குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தததை காண முடிந்தது. அவ்வீடியோவில், “இம்மாதம் 21 ஆம் தேதி ராகுல் காந்தி எர்ணாகுளத்தில் பாரத் ஜோடா யாத்ரா நடத்தியபோது அதில் நான் கலந்துக் கொண்டேன், அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அப்புகைப்படமானது ராகுல் காந்தியின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டிருந்தது. சங் பரிவார் கூட்டம் இப்படத்திலிருக்கும் என்னை லியானா ஜோலி என்று பரப்பி வருகின்றனர் என்று பரப்பி வருகின்றனர்” என்று குறிப்பிட்டு வைரலாகும் படத்திலிருக்கும் பெண் தான்தான் என்று மிவா தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் கேரள காங்கிரஸின் பேச்சாளர் லாவண்யா பல்லாள் மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் சேவாதள் ஆகியோர் வைரலாகும் தகவல் தவறு என்று குறிப்பிட்டு டிவிட்டரில் டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது. Also Read: 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக வதந்தி Conclusion நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக பரவும் தகவல் தவறானது என்பதும், வைரலாகும் வீடியோவில் இருப்பவர் இந்தியாவை சேர்ந்தவர் இல்லை என்பதும், தோல் நோய் காரணமாகவே அவர் இவ்வாறு உருகுலைந்து காணப்பட்டார் என்பதும், தற்போது அவர் உயிருடனே இல்லை என்பதும் நமக்கு தெளிவாகின்றது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். (இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது) Result: False Sources Facebook post by Miva Jolly, September 24, 2022 Tweet by Lavanya Ballal, September 24, 2022 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Komal Singh October 4, 2024 Vijayalakshmi Balasubramaniyan August 27, 2024 Ramkumar Kaliamurthy August 21, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software