schema:text
| - Fact Check
வெளிநாட்டில் சோற்றுக் கஞ்சியின் விலை இந்திய மதிப்பில் ₹540 என்று பரவும் பதிவின் உண்மைத்தன்மை
Claim
வெளிநாட்டில் சோற்றுக் கஞ்சி 2 லிட்டரின் விலை ₹540
வைரலாகும் மேற்கண்ட் தகவலை இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்
Fact
சோற்றுக் கஞ்சி என்பது பண்டைய தமிழர்களின் ஆதி உணவாகும். தமிழகம் தவிர்த்து கேரளா, கர்நாடகம், வங்காளம், ஓடிசா உள்ளிட்ட இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கஞ்சி உணவு உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற மற்ற நாடுகளிலும் கஞ்சியை உணவாக உட்கொள்ளும் வழக்கம் உள்ளது.
விகடன் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், “அரிசிக் கஞ்சியில் உள்ள கலோரிகள் உடலுக்கு அபாரமான சக்தியை வழங்கக்கூடியவை. இதில் உள்ள நார்ச்சத்து மலமிளக்கியாகச் செயல்படும்; மலச்சிக்கலைத் தவிர்க்கும். இதில் இருக்கும் மாவுச்சத்து நம் வயிற்றுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டி, செரிமானத்தைச் சீராக்கும். கோடை காலத்தில் உடல் அதிகம் வியர்க்கும்; நா வறட்சி ஏற்படும். அரிசிக் கஞ்சித் தண்ணி அருந்துவது இதற்கு மாற்றாக அமையும். உடல் இழக்கும் சத்துகளை மீட்க உதவும். வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு சிறந்த ஆகாரம் கஞ்சித் தண்ணீர்தான். சருமம், கூந்தல் அழகு தொடர்பான விஷயங்களுக்கும் இது உதவும். உடலுக்கு ஊட்டம் கொடுக்கும்” என டயட்டீஷியன் பத்மினி என்பவர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு நற்குணம் கொண்டுள்ள சோற்றுக் கஞ்சியை வெளிநாட்டவர் இந்திய மதிப்பில் ₹540க்கு விற்பனை செய்வதாக கூறி புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, அப்படம் குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக, வைரலாகும் பதிவில் காணப்படும் Alpro Rice Drink Original விலை குறித்து தேடினோம். இத்தேடலில் அப்பானத்தின் ஒரு லிட்டர் விலை 21.20 டாலர் என்பதை அறிய முடிந்தது, இது இந்திய மதிப்பில் ₹1676.79. அதுவே 2 லிட்டர் என்றால் அதன் மதிப்பு ₹3373.58 ஆகும்.
இதனையடுத்து அந்த பானம் உண்மையிலேயே சோற்றுக் கஞ்சிதானா என ஆய்வு செய்தோம். அதில் அந்த பானம் இந்தியர்கள் உட்பட அருந்தும் சோற்றுக் கஞ்சி கிடையாது, அது அரிசியை மூலப்பொருளாக கொண்ட ஒரு உற்சாக பானம் என்பதை அறிய முடிந்தது. இந்த பானத்தில் 12.5 சதவீதம் மட்டுமே அரிசியாகும். இதில் டிரை-கால்சியம் பாஸ்ஃபேட், கெலன் கம், பொட்டாசியம் பாஸ்ஃபேட் உள்ளிட்ட ரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றது.
Result: Partly False
Sources
Article from Vikatan
Alpro.com
Amazon.com
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|